பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

156 ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டும் 31-ஆவது மலாடான ஜன நாதவள............... திருக் கோவலூர்........................... கொன்....................ல் அரும்பாக்கிழான் ஸ்ரீ மதுராந்தகன் பொன்னம்பலக் கூத்தனான கலிங்கராஜனேன் இத் திருக்கோவலூரான மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கம் நான் விலைகொடுத்துக் கொண்டுடைய தெங்கந்தோட்டத் திருவீரட்டான முடையார்க்குத் திருநத்தா வனமாக நான் விட்டுக்கொண்டு............(எஞ்சிய பகுதி சிதைந்து போயிற்று -S. I. I. Vol. VII 891. 7. செஞ்சியர்கோன் காடவன் :- இவன் செஞ்சியின் கண்வாழ்ந்த ஒருகுறு நிலமன்னன், காடவன் என்பது பல்ல வனைக் குறிக்கும் - ஒரு பெயராகும். இவ் வுண்மையைக் 'காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்குமடியேன்' என்னும் திருத்தொண்டத்தொகை படியாலும், 'ஐயடிகள் காடவர் கோபைனார்' என்னும் பெயராலும் உணரலாம். பல்ல வர்கள், காடவர்கள் எனவும் வழங்கப்பெற்றனர் என்று துப்ரேல் துரைமகளுர் தமது பல்லவர் சரித்திரத்தில் கூறியிருப்பது ஈண்டு அறியத்தக்கது.! எனவே, இத் தலைவன் பல்லவர் மரபினன் என்பது வெளியாதல் காண்க. விக்கிரம சோழனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி. பி. 1129-ல் கும்பகோணத்திற்குத் தென் கிழக்கில் உள்ள ஆலங்குடியில் வரையப்பெற்றுள்ள கல்வெட் டொன்றில் 2 அவ் வேந்தன் காலத்திய அதிகாரிகளுள் சிலர் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்களுள் செஞ்சி 1 The Pallavas-by J. Dubreuil page 69. 2S. 1. I. Vol. V No. 458.