பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'நம்பி, சேக்கிழார், உமாபதி சிவாசாரியார் என்போர் கூறி யுள்ள வரலாற்றுண்மைக்கு முற்றிலும் முரண்பட்டிருத்தல் காணலாம். அன்றியும் தொன்றுதொட்டு வழங்கிவரும் முறைக்கும் அது மாறுபடுகின்றது. மூவரும் பொய் யடிமையில்லாப் புலவர் மாணிக்கவாசகர் என்று யாண்டும் குறிப்பிடாமை அறியத்தக்கது. இவர்களுள் காலத்தால் முற்பட்டவராய்க் கி பி. ஒன்பதாம் நூற்றான் டின் இறுதியிலும் பத்தாம் நூறாண்டின் தொடக்கத் திலும் விளங்கிய நம்பியாண்டார் நம்பி அத்தொடர் கடைச் சங்கப் புலவரைக் குறிக்குமெனக் கருதியுள்ளமை திருவத் தா தியால் உணரப்படும். எனவே, இக்கொள்கையும் தவருதல் காண்க. மாணிக்கவாசகர் திருஞானசம்பந்த சுவாமிகட்கு முற் பட்டவர் என்பது பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணத்தாலும் பரஞ்சோதி முனிவர் திரு விகாயாடற் புராணத்தாலும் நன்கறியக் கிடக்கின்றது என்பர். இவ்விரு புராணங்களும் சிறந்த தமிழ் நூல்களே; ஆனால் சரித்திர கால ஆராய்ச்சிக்குப் பயன்படுவன அல்ல என்பது அறிஞர் பலரும் உணர்ந்ததேயாம். இதுகாறும் விளக்கியவாற்றால் திருவாதவூரடிகளாகிய மாணிக்க வாசகர் மூவருக்குப் பிந்தியவர் என்பது நன்கு புலனாதல் காண்க. அடிகள் தாம் இயற்றியருளிய திருச்சிற்றம்பலக் கோவையாரில் 306, 327ஆம் பாடல்களில் முறையே "வரகுணனாந் தென்னவனேத்து சிற்றம்பலத்தான்' என வும், 'புயலோங்கலர் சடையேற்றவன் சிற்றம்பலம் புகழும் மயலோங்கிருங்களியானை வரகுணன்' எனவும் வரகுண