பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாண்டியனைப் பாராட்டியிருத்தலால் அவ்வேந்தன் காலத் தவராயிருத்தல் வேண்டும். கடைச்சங்க காலத்தில் வர குணன் என்ற பெயருடைய பாண்டியன் ஒருவனும் இல்லை. அக்காலத்திற்குப் பிறகு கி. பி. 575 வரையில் பாண்டி நாட்டில் நடைபெற்ற களப்பிரர் ஆட்சிக்காலத்தில் அடிகளால் புகழப்பெற்ற பெரும் புகழ்படைத்த வரகுண பாண்டியன் திருந்தனனெனல் சிறிதும் ஏற்புடைத் தன்று. எனவே, அவற்குப் பின்னர் நிகழ்ந்த பாண்டியாது முதற் பேரரசில் தான் அடிகள் குறித்துள்ள வரகுண பாண்டியன் இருந்தனனாதல் வேண்டும், அப்பேரரசும் கி. பி. 575 முதல் கி. பி. 900 வரையில் நிலைபெற்றிருந்தது என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படு கின்றது. அக்காலப்பகு தியில் வரகுணன் என்ற பெயரு டைய பாண்டியர் இருவர் பாட்டனும் பேரனுமாக இருத் தனர் என்பது சின்னமனூர்ச் செப்பேடுகளால் புலப்படு கின்றது. அவர்களுள் கி. பி. 862 முதல் கி. பி. 980 வரை அரசாண்ட இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகர் இருந்திருத்தல் வேண்டும் என்பது சிலர் கொள்கை. இதனை ஏற்றுக் கொள்வதில் சில தடைகள் உள்ளன. ஆதலால் இதனையும் ஈண்டு ஆராய்தல் இன்றியமையாததாகும். அடிகளால் பாராட்டப்பெற்ற வரகுண பாண்டியன் காலத்தில் சோழநாடு அவன் பேரரசுக்கு உட்பட்டிருந்தது என்பது திருச்சிற்றம்பலக் கோவையாரலும் பட்டினத்தடி களது திருவிடை மருதூர் மும்மணிக் கோவையாலும் நன்கறியக் கிடக்கின்றது, இரண்டாம் வரகுணன் தந்தையாகிய ஸ்ரீமாறன்