பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெற்றனவா தல் வேண்டும். அவ்வருட் பாடல்களைத் தேவாரம் என்று தம் நூலில் முதலில் குறிப்பிட்டோர் இரட்டையரே என்பது முன்னர் விளக்கப்பெற்றது. ஆகவே. அப்புலவர்களின் காலமாகிய கி. பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் மூவர் பாடல்கள் தேவாரம் என்று வழங்கிவருகின்றன என்பது தேற்றம். இதுகாறும் கூறியவாற்றால் முற்காலத்தில் தேவாரம் என்பது வழிபாடு என்ற பொருளில் வழங்கியது என்பதும் வழிபாட்டில் பாடப்பெற்றுவந்தவைபற்றி, கி. பி. பதி நான்காம் நூற்றண்டுமுதல் மூவர்பாடல்கள் தேவாரம் என்று வழங்கப்பெற்று வருகின்றன என்பதும் அதற்கு முன்னர் அப்பாடல்கள் அப்பெயரால் வழங்கப்பெற் நமைக்குக் கல்வெட்டுச்சான்றுகதைல் இலக்கியச் சான்றுகளாதல் கிடைக்கவில்லை என்பதும் நன்கு புலப் படுதல் காண்க. இ-ஆ 5