பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

83 கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்துமைவில் உள்ள திருப்பு றம்பயம் சிவாலயத்தில் திருச்சுற்று மாளிகையில் சில சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றை அகத்தியர், புலத்தியர் முதலானோர் எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்தனர் என்பது புராணத்திற் காணப்பெறுஞ் செய்தியாகும். ஆனால், அக்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு விழும்பரையன் என்ற தலைவன் ஒருவன் வன்மீகமுடை யாரையும் திருவலஞ்சுழி, டையாரையும் முதற்பிர காரத்தில் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு திபந்தம் விட்டன என்று கூறுகின்றது. எனவே; ஆருசிறைவ னிடத்தும் வலஞ்சுழிப் பெருமானிடத்தும் பேரன்புபூண்டு ஒழுகிவந்த அத்தலைவன் புறம்பயத்துள்ள ஆலயத்தில் அக்கடவுளரை எழுந்தருளுவித்தனன் என்பது நன்கு வெளியாதல் காண்க. கும்பகோணத்தில் நாகேசுவரர் ஆலயம் என்று வழங்கப்பெறும் குடத்தைக் கீழ்க் கோட்டத்தில் முதற் பிரகாரத்தில் செம்பியன் பவ்லன ராயன் என்ற தலைவன் திருப்புறம்பயமுடைய பெருமானை எழுந்தருளுவித்து வழிபாட்டிக்குப் பதினேழாயிரம் பொன் அளித்தனன் என்று அங்குள்ள கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. புறம்பயமுடைய பெருமானுக்கு அத் தலைவன் கட்டுவித்த சிறுகோயிலை நாகேசுவரர் ஆலயத்தில் இன்றும் காணலாம். இத்தகைய கோயில் களையும் இளங்கோயில்கள் என்று கூறுவது பொருத்த முடையதேயாம். 6. ஆலக்கோயில்:- தேவாசப் பதிகங்களில் குறிக்கப்பெற்ற பிறிதொருகோயில் ஆலக்கோயில் ஆகும் இது திருக்கச்சூரின்கண் உனது. சிவபெருமானை ஆலமர் செல்வன் என்று அறிஞர் கூறுவர். எனவே,, இறைவன்