பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix காவலர்க்கு-ஆய்வுஆக்கும் அன்பர்க்கு-என்றென்தும் என் நன்றி திறைந்த வணக்கங்களும் வாழ்த்துகளும். தனியுடைமை அழிவே-பொதுவுடைமை ஆக்கமேஅனேத்து ஊழல்களையும் அழிக்கும்; அனைத்து அறங்களேயும் ஆக்கும். அதுவரை கூட்டுறவே நாட்டுயர்வுக்கு. எனவே, தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்-விற்பனை யாளர் உலகில் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கமே எனக்குத் தில்லை; திருவரங்கம். அத்தகைய அமைப்பு ஆய்வுலக ஆண்டிப் பண்டாரமாகிய எனக்குக் கொடுத் துதவிய கடனுக்கு எழுமையும் கடன்பட்டுள்ளேன். (திருப்பித் தந்து(தி) விடுவேன் ஆயினும்!) - (5) இந்நூல் முன்னர்க் கட்டுரைகளாகவும் இப்போது துரலாகவும் அச்சாகிய போது ஒப்பு நோக்கிப் பிழைதிருத் தங்கள் செய்துதவிய என் நண்பர்கள் திரு. இ. சுந்தர மூர்த்தி, எம். ஏ. , திரு. வ. செயதேவன், பி. எ.சி., எம். ஏ., திரு. வீ ஞானசிகாமணி, எம். ஏ. , திரு. அ. நாகலிங்கம், எம். ஏ. ஆகியோருக்கும், சென்னைப் பல்கலைக் கழகத்தின் பழைய விஞத்தாள்கள் கிடைக்க உதவிய திரு. க. ப. அறவாணன், எம். ஏ., எம். லிட்., அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றி. நூலகமே நெஞ்சமாகக் கொண்டுள்ள சென்னைப் பல்கலைக் கழக நூலகர்-உழைப்பின், ஒழுக்கத்தின் உண்மை யின் உருவம் திரு. பி. ஏ. மோகனராக அவர்களின் ஆதரவால் உருவாகியதே இந் நூலின் இறுதியில் உள்ள "கற்கத் தக்கன பட்டியல். நூலகரின் பெயரே கொண்ட டாக். ர் பட்ட ஆய்வு மாணவர் திரு. கு. மோகனராசு, பி. எ.சி., எம். ஏ. சான்றிதழ் - மானிடவியல், அவர்கள் இப்பட்டியல் உருவாக உறுதுணை புரிந்தார்கள். ஒரு பெயர். கொண்ட இவர்கள் இருவருக்கும் என் உளமார்ந்த நன்றி உரியது. - - - இந் நூலின் வாழ்வுக்கு மட்டுமன்றி என் வாழ்வு நூலுக் கும் காரணமாக உள்ள என் மனைவியார் பேராசிரியை திருமதி கிருட்டின சஞ்சீவி, எம்.ஏ.எல்.டி. அவர்கட்கு...?