பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} இலக்கிய இயல் ஆம். உயர்ந்ததிலும், உயர்ந்ததும் இழிந்ததும் உண்டு; இழிந்ததிலும் உயர்ந்ததும் இழிந்ததும் உண்டு. உயர்வு, தாழ்வு என்பன சார்புச் சொற்கள் (Relative Terms) தசமே! இழிந்த மயக்கம் ஐம்புலன்கள் வழிவரும் மயக்கம்; உயர்ந்த மயக்கமோ, உயர்ந்த உணர்வுகட்காகத் தவருன வகையில்-தவருனவகையார்க்கு- நல்லது செய்து படும் அல்லல்கள்! ஆம். 'அறத்தான் வருவதே இன்பம் என்பதை மறந்ததால் வரும் கேடு அது. ஐம்புல மயக்கங்களுள் எல்லாம் அருந்தவ முனிவரும் மயங்கும் ஈர்ப்பு- இழுப்பு கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐவகை இன்பத்தையும் தன்ன கத்தே பெற்றிருக்கும் பெண்ணின்பமே ஆகும். இந்தப் பெருந் தடை-வலையை-அமைத்ததுமே இயற்கைதான். அது பெருந்தடையாய், வலேயாய், இருப்பதாலேயே அதை எதிர்த்து வெல்லுவதிலேயே ஆணின் ஆண்மையும் பெண்ணிண் பெருமையும் உள்ளன. எளிமை! எளிமை! அருமை! அருமை! ஆனால் அருமையாம் அருமையை அடைவது அருமை! எளிமையாம் எளிமை அடைவது எளிமை! அருமையிலும் எளிமைக்கு இரையாகும் இயல்பை மனிதனிடம் இயற்கை படைத்திருப்பதும் ஒரு பெருக்கடை- வலேயே ஆகும். அதை வெல்வதே வெற்றி. இவ்வுண்மை வென்முய் ஐம்புலன் மிக்ர்ே என்று கம்பிரான் திருநீலகண்டருக்குத் தந்த கற்சான்ருல் நன்கு விளங்கும். -