பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ சி.பா. 101 கூட்டம் அமர்ந்திருக்கும் அழகிலும் அந்த அழகென்னும் நங்கை கவிதை தந்தாள் என்றும் குறிப்பிட்டுள்ளார். காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்; அந்தச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எல்லாம் கண்ணில் தட்டுப்பட்டாள் மாலையிலே மேற்றிசையில் இலகுகின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டங் தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள் மேலும் சிறுகுழந்தை விழியினிலும், திருவிளக்கின் ஒளியினிலும், மலர் தொடுக்கும் நங்கையரின் விரல் வளைவினிலும் , உழவன் கலப்பையைத் தோளில் சுமந்து செல்லும் நடையினிலும், நன்செய் நிலம் மரகதக் கம்பளம் விரித்தாற்போன்று காட்சி தரும்நேர்த்தியினிலும் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் உள்ளத்தைப் பறி கொடுத்ததாகப் பாங்குறக் கிளத்துகின்றார். - சிறுகுழந்தைவிழியினிலே ஒளியாய் நின்றாள் திருவிளக்கிற் சிரிக்கின்றாள்; நாரெடுத்து நறுமலரைத் தொகுப்பாளின் விரைவளைவில் நாடகத்தைச் செய்கின்றாள் அடடே செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுகடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிலத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள் தாம் பெற்ற பேற்றினை நாமும் பெறவேண்டும் என்ற நல்லுள்ளத்தோடு, இ.ஏ.-7