à.tarr. 195 பாரதிதாசனுக்கு, சரசுவதி. வசந்தா,ரமணி என்னும் மூன்று பெண்களும், கோபதி என்ற ஆணும் பிறந்தனர். கோபதி என்ற பெயரே மன்னர் மன்னன் என்று பெயர் மாற்றம்பெற்றது. 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் நாள் இயற்கை எய்தினார். - இயற்றிய நூல்கள் பாரதிதாசன் அவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றினார். அவற்றுள் கவிதை நூல்களே மிகுதி. கவிதை நூல்களுள் குறிப்பிடத்தக்கவை சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி, வீரத்தாய், இசையமுது தொகுதி- , 2, பாண்டியன் பரிசு, குறிஞ்சித்திட்டு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம். தமிழுக்கு அமுதென்றுபேர், வேங்கையே எழுக போன்றவை. உரைநடை நூலுள் மானிடம் வாழ்க குறிப்பிடத்தக்க நூலாகும். புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன், சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப் பட்ட பின்பு அவரது பாடுபொருள் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டது. மொழி, இனம், நாடு, சீர்திருத்தம் பற்றி மிகுதியாகப் பாடினார். இவையே அவரைப் புரட்சிக் கவியாக, பாவேந்தராக மாற்றின. மொழி - தம்ழ் இலக்கிய உலகில் தாய்மொழியாம் தமிழுக்காக, தமிழின் ஏற்றத்திற்காக மிகுதியாகப் பாடியவர் பாரதி தாசன் கான் என்றால் அது உண்மை அன்றி வேறில்லை. அவர் தமிழை உயிரெனப் போற்றி வாழ்ந்தார் அதனை,
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/105
Appearance