பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.tyrr, 1 t I "தமிழ் தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும் நாட்டின் உரிமை காத்தல் வேண்டும்' என்கின் றார். சீர்திருத்தம் பாரதிதாசன் வாழ்ந்த காலக்கட்டத்தில் தமிழ்ச் சமுதாயம், முடை நாற்றமெடுத்த சீர்கெட்ட சமுதாய மாக இருந்தது. பெண்களுக்கும் கல்வி இல்லை. சமஉரிமை இல்லை. இயற்கையின் நியதியாகிய காதல் மணம் மறுக்கப்பட்டது, கலப்பு மணம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்றாக விளங்கியது. பொருந்தா மணமும், குழந்தை மணமும் நாட்டை அலைகிழித்துக் கொண்டிருந்த நேரம். சாதியின் பெயராலும் சமயத்தின் பெயராலும் மக்கள் பிளவுபட்டுத் தோன்றி தமிழ்ச் சமுதாயத்தின் இச்சீர்கேடுகளை எல்லாம் களைந்து நல்லதொரு சமுதாயம்-சீர்பெற்ற சமுதாயம் அமைய அரும்பாடுபட்டார், சமு தாயத்தின் குறைகளை எல்லாம் எடுத்துக்காட்டினார். அதற்கான காரணத்தையும் அதனைக்களையும் வழிமுறைகளையும் சொன்னார். இன்று தமிழ்ச் சமுதாயம் சிறிதளவேனும் தலைநிமிர்ந்து இருக்கின்றது என்றால் அதற்குக் காரணமானர்களுள் குறிப்பிடத் தக்கவர் பாரதிதாசன் என்றால் மிகையாகாது. பெண் கல்வி ஆண்களும் பெண்களும் இணைந்ததே சமுதாயம்’ இவ்விருவரும் இல்லாமல் முழுமையான சமுதாயம் தோன்ற முடியாது. இவரின் முன்னேற்றமுந்தான் சமுதாய முன்னேற்றமாக அமையும். ஏனோ இடை,