பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 113 "கல்வியில்லாத பெண்கள் = களர்கிலம் அங்கிலத்தில் புல் விளைந் திடலாம் நல்ல o புதல்வர்கள் விளைதல் இல்லை! கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி, அங்கே நல்லறிவு உடைய மக்கள் - விளைவது நவிலவோகான்' என்று கூறுகின்றார் பாவேந்தர். பெண்கள் கல்வி கற்க முதலில் அவர்களின் பெற்றோர் உறுதியுடன் இருத்தல் வேண்டும். ஆண் குழந்தையைப் படிக்கவைப்பதில் இருக்கும் உறுதி பெண் குழந்தையைப் பொருத்தமட்டில் பெற்றோருக்குக் குறை வாகவே இன்றளவும் உள்ளது. இந்நிலை மாறவேண்டும். அதனால் பெற்றவர்களைப் பார்த்து 'பெற்றால் தந்தைதாய்மாரே-நும் பெண்களைக் கற்க வைப்பீரே! இற்றைநாள் பெண்கல்வியாலே-முன் னேறவேண்டும் வைய மேலே" என்று கூறுகின்றார். பெண்கல்வி பற்றி இவர் பல பாடல்கள் பாடி இருக்கின்றார். அவற்றுள் மணிமகுடமாகத் திகழ்வது, தந்தை மகளுக்குக் கூறுவதாக அமைந்த இசைப்பாடல். அப்பாடல் வருமாறு : தலைவாரிப் பூச்சூடி உன்னைப்-பாட சாலைக்குப்போ வென்று சொன்னாள் உன்.அன்னை; சிலைபோல ஏனங்கு நின்றாய்-நீ சிந்தாத கண்ணிரை ஏன்சிந்துகின்றாய்?