பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à.am. 115 காதல் மனம் காதலித்து மணந்துகொள்வதே தமிழர் மரபு. களவின் வழிவந்த கற்பே சிறந்தது என்பார் நம்பி அகப் பொருள் ஆசிரியர் காதலித்து மணந்துகொள்வது ஒன்று. மணந்துகொண்டு காதலிப்பது மற்றொன்று. முன்னது சிறந்தது. பின்னது ஏற்புடையது, முன்னதைப் பற்றியே சிறக்கப்பாடுகின்றார் பாவேந்தர். அது தமிழர் பண் பாட்டில் ஒன்றல்லவா? காதல் கொண்ட காளை ஒருவன் தான் காதலித்த கன்னியின் அழகினை எடுத்துக் கூறுகின்றான். "மின்னலிடை கன்னல்மொழி, இன்னும் சொன்னால் விரிஉலகில் ஒருத்திரீ அழகின் உச்சி' இரண்டே அடிகளில் பெண்மையின் அழகை இவ்வளவு உயர்வாக வருணித்தவர் இலக்கிய உலகில் பாரதிதாசன் மட்டுமே எனலாம். அது போலவே காதலி ஒருத்தி தன் காதல் அனுபவத்தைக் "கொழிக்கும் ஆணழகன்!-அவன் கொஞ்சிவந்தே எனது - விழிக்குள் போய்ப் புகுந்தான்-நெஞ்ச வீட்டில் உலாவுகின்றான்' கண்விழி புகுந்து கருத்தினில் கலந்த அவன் இதயத் தில் உலா வருகின்றானாம். இந்நிலையையே இருவரும் இதயம் மாறிப்புக்கு இன்பம் எய்தினர் என்பார் கம்பநாடார். இவ்வாறு ஆணும் பெண்ணும் காதலித்தப் பின் அக்காதலுக்குக் குறுக்கே மற்றவருக்கு என்ன வேலை. -