பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி.பா 123 வெண்ணெயை எடுத்து துய்ப்பதுபோல் அவ்வழகை உண்ணும்படியும் அமையுமாறு ஒர் பாடல் 'நீல முக்காட்டுக் காரி நிலாப் பெண்ணாள் வற்றக் காய்ந்த பாலிலே உறைமோர் ஊற்றிப் பருமத்தால் கடைந்து, பானை மேலுள்ள வெண்ணெய் அள்ளிக் குன்றின் மேல் வீசிவிட்டாள்; ஏலு மட்டும் தோழாே எடுத்துண்பாய் எழிலை எல்லாம்" பண்டிதர்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவர்கள். பழைய கதைகளில் உள்ள குறைகளை எல்லாம் எடுத்துக் கூறினால் விளக்கம் சொல்லிச் சரிசெய்து கொள்வது அவர்கள் இயல்பு. இதனை இல்லத்தரசி வீட்டுப்பணிகள் அனைத்தையும் தணிக்கை செய்வதற்கு ஒப்பிட்டு மகிழ் கின்றார். "பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக் கெல்லாம் பணிக்கையிடல் போல் அனைத்தும் தணிக்கை செய்தே" இவ்வாறு தக்க இடத்தில் தக்க உவமையைத் தக்க முறையில் கையாள்வதில் வல்லவராகப் பாவேந்தர் திகழ் கின்றார். ஓசை நயம் தொடக்கக் காலம் முதற்கொண்டே பாவேந்தர் அவர்கள் இனிய ஓசை நயம் உடைய இசைப்பாடல்களை இயற்றினார். தான் இயற்றிய பாடல்களுக்கு தாளம் ராகம் போன்றவற்றை தாமே அமைத்தார். ஆதி தாளம்