பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

statarr, - 143 "விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத் ததை விரும்ப வேண்டும்" என்ற டாக்டர் மு. வ. அவர் களின் மணிமொழியும் ஈண்டு நினைவுகூரத் தக்கதாகும்' வருதண் ணிரைப் போல்வந்தேன் மாயக் காற்றைப்போல் மறைந்தேன் (22) என்று உமார் குறிப்பிடும் ாைழ்வு பற்றிய உவமை எந்நாளும் மனங்கொளத்தக்கதாகும். ஒருவனின் வாழ்வு கழிக்கப்பட்ட வகையை, கானா றோடும் நதியேபோல் கண்ட கண்ட படிபோனேன் (23) என்று குறிப்பிட்டிருப்பதும் கருதத்தக்கது. ஆணும் பெண்ணும் இணைந்து பிணைந்து மகிழ்ந்து ஈருடலும் ஒருயிருமாய் வாழ முற்பட முடிந்தால் இவ் வுலகம் இன்பத்தின் இருப்பிடமாய் இலங்காதோ என்று கேள்வி கேட்கிறார் கவிஞர் உமார். அன்பே யானும் நீயும் இசைந்து அயலில் எவரும் அறியாமல் வன்பே உருவாம் விதியினையும் வளைத்துள் ளாக்கி முயல்வோமேல், துன்பே தொடரும் இவ்வுலகைத் துண்டு துண்டாய் உடைத்துப்பின் இன்பே பெருகி வளர்ந்திடுமோர் இடமாய்ச் செய்ய இயலாதோ? (44) இந்தவுலகில் பாவம் செய்யாத மனிதரைக் காண முடியுமா? அவ்வாறு பாவம் ஒன்றும் செய்யாமல் வாழ்வது எளிதான செயலாகுமா? அவ்வாறு பாவம் செய்தவரைப் படைத்தவன் அருநரகிலிட்டால் அவனைப் பெருங்