பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இலக்கிய ஏந்தல்கள் கருணை வள்ளல் என்று பெயரிட்டழைத்தலும் தகுமோ? என்கிறார் உமார் (58). "மானை வளர்த்த கையாலே விஞ்சப் புலியும் வளர்ந்திந்தக் கானில் வேட்டை காணுமர்ை கருணை உடையவர் ஆவாரோ?" (60) என்கிறார். ஆனால் உமார் இம்மையிலேயே இறைவன் பதத்தை யும் நித்தம் பாடி வாழ்த் த வேண்டும் என்று உணர்த்தத் தவறவில்லை. அதனைப் பின்வரும் பாட்டால் அறியலாம். வீடும் பழவீ டாகுதடா விட்டம் கூரை சுவரெல்லாம் ஆடி அலைந்து விழுநாளும் அண்டி அண்டி வருகுதடா! காடி இதனை இன்னும் நீ நம்பி மோசம் போகாமல் பாடிப் பாடி, எம்பெருமான் பாதம் போற்றி வாழ்வாயே (56) இவ்வுலக இன்பத்தை அணு அணுவாய்ச் சுவைத்து முடிக்க வேண்டும் என்னும் உமாரின் தீவிர வேட்கையைப் பின்வரும் பாடல் புலப்படுத்துகின்றது. இருக்கும் காலம் சிறிதேயாம்; இதற்குள் இன்ப வாழ்வினையாம் பெருக்கு மளவு பெருக்கிடுவோம்; பிழையொன் றதனால் உண்டோ? சொல் உருக்கும் பா ல் கேளாமல் உண்ணும் மதுவும் உண்ணாமல் பொருக்கு மண்ணில் மண்ணாகப் புதைந்து போனால் என்செய்வோம்? (67)