பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಡಿ.ಆಗೆ, 145 பாரதி இந்த நிமிஷம் சத்தியம் என்பது போலக் கவிஞர் உமாரும் பின்வருமாறு குறிப்பிடுகிறார். இந்நாள் இனிய நாளானால் இறந்த நாளுக்கு இரங்குவதேன்? பின்னாள் எண்ணி நடுங்குவதேன்? பெண்ணே கிண்ணம் நிறையம்மா! (71) இறுதியாக, கவிஞர் உமார் கய்யாம் நில்லாத இவ் வுலகில் நிலைத்த சுகத்தைப் பெறுவதற்குரிய வழியினை வகையுறச் சொல்லுகின்றார். இவ்வுலகில் அரச பதவி பெற விரும்பினால் தன்னை மறந்து வாழும் தன்னலப் பாங்கு வந்து வாய்க்க வேண்டும். ஏழைக்கும் ஏழையாய், எளியவர்க்கு எளியவனாய், தோழனாய்த் தொண்டனாய் விளக்கமுற வேண்டும். மேலும் இல்லாத பொருளுக்கு ஏங்கிடாமலும், இருக்கும் பொருளையே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருக்காமலும் இறைவன் ஆளக்கும் படியினை ஏற்று, நல்லவர், அறிஞர் தம் தொடர்பை நாளும் விரும்பிப் போற்றி, நில்லாத உலகில் நிலைத்த சுகத்தை நித்தமும் தேடி வாழவேண்டும் என்று குறிப்பிடு கிறார் கவிஞர் உமார் கய்யாம் (112. 113). "வாழ்க்கைத் தத்துவத்தைக் குறித்து உமார் கய்யாம் கொண்டுள்ள கொள்கை எவ்வாறாயிலும் அவரது கலையுணர்ச்சி அதியற்புதமாக உள்ளதென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். விஷயங்களைச் சுருக்கிக் கூறும் பொழுது உண்மையில் ஒளிபரவும்படி செய்யும் ஆற்றல் உண்மையைக் காணும் உள்ளுணர்ச்சி பல்வேறு சிந்தனை களை மனத்திலே குறிப்பாய்த் தோற்றுவிக்கும் பாவனா சக்தி, உலகப் பொதுமையாயுள்ள உணர்ச்சிகளும் கருத்துக் களும் தம் கருத்துகளை எதிரேற்றிக் கொள்ளும்படியாகச்