பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரடியாகக் கூறுவது பக்தி, மொழி இவற்றின் துணைகொண்டு நாட்டுப் பற்றினை எடுத்துக்கூறும் கவிஞர் பல இடங்களில் நேரிடையாகக் கூறுகின்றார். இப்பாடல்களில் பக்தியோ அல்லது மொழி உணர்வோ இன்றி முழுவதும் நாட்டுப் பற்று மட்டுமே அமைந்து உள்ளது எனலாம். படிப்போரின் உள்ளத்தில் உணர்ச்சியைத் தூண்டிச் சிந்திக்கவும் செயல் ப_வும் வைக்கின்றது. - அடிமை இந்தியாவில் மக்கள் பட்ட துயரங்களைக் கூறும் போது நம் கவிஞர், முப்பத்து முக்கோடி மக்கள் இந்த மூப்புடை இந்தியத் தேவிபெற்றாள் முப்பத்து முக்கோடி மக்களுக் தானுமாய் முச்சந்தி வீதியில் கத்துகின்றாள் எனப்பாடுகின்றார். இப்பாடலைப் படிக்கும்போது உள்ளத்தில் ஒர் ஏழைத்தாய் தம் குழந்தைகளுடன் வறுமையின் கொடுமை தாளாமல் முச்சந்தியில் நின்று பிசிசை எடுக்கும் அவலக்காட்சி தோன்றுகின்றது. நம் நாட்டின் ஏழ்மையும் மக்களின் இரிங்கத்தக்க நிலையும் உள்ளத்தை வாட்டுகின்றன. இதனால் எப்பாடுபட்டேனும் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதிப்பாடு மேலோங்குகின்றது அது போன்றே, வந்தவர் போனவர் யாரையும் நம்பி வாடின காலங்கள் ஓடின தம்பி இந்தத் தினம் முதல் இந்திய நாடு என்னுடை நாடென்ற எண்ணத்தைக் கூடு என்ற பாடலில் நம் நாட்டின் வணிகம் பொருட்டு வந்த பிற நாட்டாரிடம் அடிமைப்பட்டு அடைந்த இழிநிலை