சி.வா. 161 பொதுப்படக் கலைக ளெல்லாம் தமிழிலே புதுமை பூண மதிப்பொடே எவரும் போற்ற கம்காடு மணக்க வேண்டும் என்று பாடுகின்றார். காட்டு நலச் சிந்தனை நாமக்கல் கவிஞர் கூறும் நாட்டு நலச் சிந்தனையைச் சுதந்திரத்தின் தேவை, சுதந்திரத்தை அடையும் முறை, சுதந்திர நாட்டின் நலன் என மூவகையாக்கலாம். தேவையே மாற்றத்திற்கும் கண்டுபிடிப்பிற்கும் அடிப் படை என்பர். நாட்டு மக்களின் நலன், தேவை ஆகிய வற்றை ஆட்சியாளர் கவனிக்காது தன்னலத்துடன் செயல்படும்போது, மக்களின் தேவை அவர்களைத் துாண்டிச் செயல்படச் செய்கின்றது. ஆள்பவர் வேற்ற வராக இருப்பின் போராடும் மக்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் எனப்படுவர். - - அடிமை இந்தியாவின் கொடுமைகளைக் கவிஞர் எடுத்தியம்புவது நாட்டின் சுதந்திரத் தேவையை நமக்கு உணர்த்துகின்றது. அன்பறம் வளர்ந்திடாமல் ஆற்றலும் அறிவும் மூன்றும் வன்புகள் சூதும் வாதும் வழக்குகள் வளரும் வாழ்வின் இன்பமும் ஊக்கமும் ஆன்ம எழுச்சியும் இன்றி என்றும் துன்பமும் சோம்பல் குழும் சுதந்திரம் இல்லாகாட்டில்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/161
Appearance