பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*M .t arr. 165 மக்களின் தேவை உணராத, மக்களுக்காக மக்களால் ஆளப்படாத ஆட்சியின் மாற்றத்தை வலியுறுத்திப் பrடுகின்றார். இங்ங்னம் சுதந்திரத்தைப் பெறும் முறையிலும் கவிஞரின் நெறிப் புலப்பாடு விளங்குகின்றது. சீரிய கலைமை ஒற்றுமையுடன் நடத்தப் பெறும் போராட்டமே வெற்றி பெறும் என்பதை உணர்த்துகின்றார். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதன் வாயிலாக, மக்களும் ஆட்சியாளர்களும் தத்தம் கடமை உணர்ந்து செயல்பட வேண்டுகி ன்றார். சுதந்திர நாட்டின் நலன் நாமக்கல் கவிஞர், அடிமை இந்தி பாவையும், சுதந்திர இந்தியாவையும் ஒருங்கே கண்டனர். அடிமைநிலை நீங்க அவரின் பாடல்கள் துணை நின்றதைப் போன்றே, சுதந்திர இந்தியாவின் நலன் குறித்த அவர்தம் பாடல்கள் நற்சிந்தனையின் விளக்கமாகத் திகழ்கின்றன. சுதந்திர நாட்டின் நலன் குறித்துக் கவிஞரின் பாடல்களை ஒற்றுமை, பொருளாதாரப் பொதுவுடைமை, சமுதாயச் Wiiதிருத்தம் எனப் பகுக்கலாம் ஒற்றுமை அன்னியர்கள் கமை ஆண்ட அவதிநீங்கி அரசுரிமை முழுவதையும் அடைந்தோம் நாமே எனினும் ஏன்? சுதந்திரத்தின் இன்பம் காண எவ்வளவோ மனமாற்றம் இன்னும் வேண்டும் எனப்பெற்ற சுதந்திரத்தைப் பேணுதற்குத் தேவையான மனமாற்றம் பற்றிப் பாடுகின்றார். சுதந்திரம் பெறுதல் வேண்டி, பாகுபாடில்லாமல் ஏற்றத்தாழ்வு தவிர்ந்த இ.ஏ.-1 1