பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I8 இலக்கிய ஏந்தல்கள் யுள்ளது. கதை, பாடல், உத்திகள் என்னும் நிலையில் திரைப்படக் கலைக்கு இலக்கியம் சிறப்பான பணியாற்றி வருகின்றது. பேச்சுக்கலை வளர்ச்சியில், உணர்ச்சி பூர்வமான, அழகான பேச்சுக்கு இலக்கியம் சிறந்த கருத்துப் பெட்டக மாக அமைந்து விளங்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கைக்கலைக்கு இலக்கியம் சிறப்பாகத் தொண்டுபுரிந்து வருகின்றது. "இலக்கியம் வாழ்க்கைக்காகவே என்னும் கொள்கை இலக்கியத்தின் ச மூ க த் தன்மையை-பொறுப்பை விளக்கிக் கூறுகின்றது. வையத்துள் வாழ்வாங்கு வாழும்’ கலையை உணர்த்துவதே இலக்கியத்தின் தலையாய குறிக்கோள் எனலாம். இவ்வாறாக இலக்கியம் இலக்கிய வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் பி ற க ைல க ளி ன் வளர்ச்சிக்காகவும் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பெரும்பாடுபட்டு வருகின்றது.