பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்காலக் கவிதைப் போக்குகள் "உள்ளத்துள்ளது கவிதை-இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில்-உண்மை தெரிந்துரைப்பது கவிதை' என்னுங் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் குரல் மறுமலர்ச்சிக் கவிதையுலகில் தனியிடம் பெற்றுள்ளது. கவிதைக்கு உருவம் அமையும்போதே இன்பம் விளைகின்ற தென்றும், உண்மையைத் தெரிந்துரைப்பதில் குறிக்கோள் நிறைவேறுமென்றும் கவிமணி கவினுறவே உணர்த்து ன்ெறார். எல்லாம் அற்புதப் பொருளாகக் கவிஞன் பார்வை யிற்படும்போது 'அறம் பொருள் இன்பம் வீடு என்பவையே அன்றியும் எளியன எனக் கருதப்படும் எவையுமே கூடக் கவிஞனின் பார்வையில் ஒளி பெறும். எப்பொருளையும் பாடும் பொருளாகக் கொள்ளலாம் என்பது மறுமலர்ச்சி இலக்கிய உலகில் கோலோச்சும் கொள்கையாயிற்று. கிழிந்த பழம்பாய்’ பெ. தூரன் கருத்தில் ஒரு கவிப் பொருளாயிற்று. தொலைபேசி கே பி. எஸ். அமீதுக்குரிய பாட்டுச் செய்தியாயிற்று. ஒற்றையடிப் பாதை சிதம்பர ரகுநாதன் கவிப் பார்வையில் பாட்டுப் பொருளாயிற்று; பட்ட மரம் தமிழ் ஒளிக்குப் பசுமைக் கற்பனை தந்தது. கட்டடக் கலையில், போர் முறையில் வாழ்வின் பல துறைகளில் புதுமை இடம் பெற்றது போலவே