பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இலக்கிய ஏந்தல்கள் கவிதையிலும் இடம் பெற்றது; இடம் பெறுகின்றது. மரபில் ஊன்றிய புதுமையும் தமிழ்க் கவிதைகளில் உண்டு; மரபைப் பெரியதோர் அடிப்படையாகக் கொள்ளாத படைப்புகளும் உண்டு பாடல்களில் திரைப்பாடல்கள் மக்களின் கருத்தை விரைவிலும் எளிமையிலும் கவர்கின்றன. இத்துறையில் முற்காலத்தில் பாபநாசம் சிவன், டி.கே. சுந்தரவாத்தியார், கம்பதாசன் ஆகிய கவிஞர்கள் சிறப்பிடம் பெற்றனர். அண்மைக்கால வளர்ச்சியில் கண்ணதாசனும் பட்டுக் கோட்டை கலியாணசுந்தரமும் குறிப்பிடத் தகுந்த பணியாற்றிப் புகழுக்குரியோர் ஆயினர். திரைப்பாடல்களில் கவியரசு கண்ணதாசன் பழந் தமிழ் மரபுச் செல்வத்தை விடாது அமைத்துப் போற்றிப் புதுவடிவமாக்கியதைச் சில சான்றுகளில் காணலாம். அன்று வந்ததும் அதே கிலா இன்று வந்ததும் அதே கிலா என்று பாடுங் கவிஞர், அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார் யாம்.எங்தையும் இலமே -புறநானூறு: 112 எனவரும் புறநானூற்றுப் பாடலை மறவாது பாடி யுள்ளார்.