பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 இலக்கிய ஏந்தல்கள் வந்த பாரதிதாசன் அவர்களுடன் ஆசிரியர்-மாணவர் தொடர்பு கொண்டார். பாவேந்தரின் அன்பிற்குப் பாத்திரமாக அவருடைய இல்லத்தினையே சின்னாட்கள் தம் வாழ்விடமாகக் கொண்டார். நீறுபூத்த நெருப்பாக இருந்த திரு. விஜயரங்கத்தின் கவியுள்ளத்தைத் தம் ஆர்வக் காற்றால் ஊதிக் கணியச் செய்ததில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்க்குப் பெரும்பங்கு உண்டு. கரந்தைப் புலவர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் கவிஞர் பயின்று வந்தபொழுது "சிற்பியின்"கனவு" என்றொருநாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தினைச் சக்தி நாடக சபை'யினர் அரங்கேற்றித் தமிழ் நாடக உலகிற்கு நம் கவிஞரை அறிமுகப்படுத்தினர். இந் நாடகம் கதையே பின்னாளில் வணங்காமுடி’ என்ற பெயரில் திரைப்படமாக வந்து வெற்றி கண்டது தொழிலும் தொண்டும் இலக்கியப் பத்திரிகைகளுக்குக் கவிதைகள் தீட்டி அனுப்பி வந்தார். தமிழிற்கு ஒளியூட்டவல்ல நல்ல இலக்கி யங்களைப் படைக்க வேண்டும் என்பதே அவருடைய இலட்சிய நோக்காக இருந்தது தமிழ் ஒளி என்ற புனைபெயரில் கவிதையுலகிற்கு அறிமுகமானா சென்னையிலிருந்து வெளி வந்த முற்போக்கு பத்திரிகைகள் பலவற்றில் அவர் கவிதைகள் இடம் பெற்றன, கவிஞர் பிற்பட்ட சமூகத்தில் பிறந்தவர்; எனவே, இயல்பாகவே தாழ்த்தப்பட்ட மக்களிடம் பாசம் கொண்டிருந்தார். அவர்தம் உரிமைகளுக்குப் போராடும் திறமும் கொண்டிருந்தார். தொழிலாளர்களின் வேலை