பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெபா. Ꭵ8 ↑ நீக்கம், கதவடைப்பு, கூலி உயர்வு முதலான தொழிற் சங்கப் போராட்டங்கள் இவர் இரக்க உள்ளத்தை ஈர்த்தன. அதன் விளைவு, அவர்தம் உள்ளத்தை, வாழ்வை, பணியைப் பாட்டாளி வர்க்கத்தின் நலத்திற்கென்றே காணிக்கையாக்கிக் கொண்டதாகும். தம் புரட்சிகரமான கருத்தை உள்ளடக்கிப் பல நூற்களை இவர் அந்நாளில் எழுதினார். கவிதைகளோடு மட்டுமின்றிக் கணக்கற்ற சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதித் தொழிலாளர் நலம் நாடினார். 1949ஆம் ஆண்டில் முன்னணி என்ற வார ஏட்டின் துணையாசிரியராகப் பணியாற்றிவிட்டுப்பின்னர், 'ஜனயுகம் என்ற திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி, இரண்டு திங்கள் நடத்தினார். பணம் பற்றாக்குறை அவர் பத்திரிகை முயற்சியினை வாழ விடவில்லை. குடும்பச் சொத்தான தென்னந்தோப்பையும் விற்றுப் பத்திரிகையை நடத்த வேண்டும் என்று அவர் மேற்கொண்ட முயற்சி பெற்றோர் இணங்காமை காரணமாகத் தோல்வியைத் தழுவியது. சென்னை வாழ்க்கை கவிஞர் 1949ஆம் ஆண்டிலிருந்து 1962ஆம் ஆண்டு வரை பதின்மூன்று ஆண்டுகள் சென்னையில் தங்கி வாழ்ந் தrர். தொடக்க காலத்தில் அரசியல் ஈடுபாடு கொண்டி ருந்த அவர் 1953ஆம் ஆண்டிலிருந்து இலக்கிய ஆராய்ச் யிெல் மட்டுமே ஈடுபாடு கொண்டார். சங்க இலக்கியந் தொடங்கிப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் இயற்றிய கவிதைப் படைப்புகள் வரை ஆராய்ந்த அவர் நெஞ்சில் கம்பநாடனின் கவிதை தனித்ததோர் இடத்தினைப் பெற்றது. "தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சி என்பது கம்பனை மீண்டும் காண்பதில் தான் இருக்க @・@r.ー12・