பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 இலக்கிய ஏந்தல்கள் வேண்டும்' என்பது அவர்தம் ஆணித்தரமான நம்பிக்கை யாகும். எனவே தம்முடைய கவிதையொன்றில், பண்ணுக்குப் பண்தக்தும் பயன்தந்தும் செந்தமிழ்க் கண்ணுக்குக் கண்தக்தும் கதிதந்தும் நீ சென்ற விண்ணுக்கு மதிதந்தும் விறலிக்கே இகழ் தந்தும் எண்ணுக்குக் கடல்தந்தும் எமக்கிதயங் தந்தாய்நீ!’ என்று பாடக் காணலாம். 1955ஆம் ஆண்டில் விதியோ, வீணையோ? என்னும் இசை நாடகத்தினைப் புதுப்போக்கில் தமிழுலகத்திற்கு டிைத்துத்தந்தார். 1957-58ஆம் ஆண்டுகளில் கண்ணப்பன் கிளிகள்', 'புத்தர் காவியம்’ என்ற இரண்டு கவிதை நூல் களை இயற்றினார். ஆனால் புத்தர் காவியம் மட்டும் முடிவு பெறவில்லை. 1959-60ஆம் ஆண்டுகளில் ஆராய்ச்சி நூல்கள் சில வெளிவந்தன. சிலப்பதிகாரம் நாடகமா காவியமா? திருக்குறளும் கடவுளும்’, ‘தமிழர் சமுதாயம்' என்பனவே அவை. பின்னர், கவிஞர் வாழ்க்கையில் ஒரு கொடிய திருப்பம் வந்துள்ளது. என்புருக்கி நோய் அவரி பிஞ்சுடலை வாட்டியது. பெற்றோர் சென்னை வந்து கவிஞரை வலுக்கட்டாயப்படுத்திப் பு த ைவ க் கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் உடல்நிலை மேலும் மோசமானது. 1964ஆம் ஆண்டு சென்னை வந்தார். வறுமை வாட்டியது. நோய் முற்றியது. 29-3-1965 அன்று கவிஞர் வாழ்வு முடிந்தது. நாற்பதே ஆண்டுகள் மண்ணில் வாழ்ந்த அக் கவிஞர் வாழ்வு இரங்கத்தக்கது. ஏன், கவிஞர் பலரின் வாழ்வும் இத்தகைய தன்மையுடையதுதானே!