பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இலக்கிய ஏந்தல்கள் உள்ளீடு கவிஞர் தம் கவிதையில் அரிய கருத்துக்கள் பலவற்றை ஆங்காங்கே பதித்திருக்கக் காணலாம். “Poets are judged by the frame of mind they induce.” இம்முறையில் பார்த்தால் கவிஞர் தமிழ் ஒளி, தம் கவிதை யினைப் படிப்போருக்கு நற் கருத்துக்களைப் புகட்டி நிற்கக் காணலாம். வேண்டும் வரம் எனுங் கவிதையில், மனமென்ற பேயை விரட்டிப் பிடித்து வசத்தில் மடக்கிவிட்டால், தினம்வென்று வென்று சிரித்துச் சிரித்துத் திடங்கொண்டு வாழ்ந்திடலாம்! ஐந்து குதிரைகள் ஓடுமுன் பற்றி அதட்டி நிறுத்திவிட்டால் இந்த உலகம் கமைச் சுற்றி வந்திடும் இட்ட பணிபுரியும்! ஓட்டை உடலம் உருப்பட கித்தம் ஒருசிங்தை கொண்டிருந்தால், கோட்டை யிதற்குக் கொடிகட்டிச் சேனைகள் கும்பிட வாழ்ந்திடலாம்: கேவல ஆசையின் வாய்கள் கொறுங்கக் கிழித்தெறிக் தால் உலகில், - சாவு பயப்படும்; மானுடம் வென்று "ஜயம்ஜயம் என்றாடும்! -தமிழ் ஒளியின் கவிதைகள். பக். 113