h), Lurr. 189). ' 'கவிஞன் எனும் கவிதையில், சாயும் கதிர்களிலே-இருட் சாலம் புரிகையிலே - காயும் நிலவெனவே - வழி காட்ட எழுந்திடுவேன்! -தமிழ் ஒளியின் கவிதைகள். பக். 117 என்றும், - ஊரை எழுப்பிடவே-துயர் ஒன்றை நொறுக்கிடவே தாரை முழக்கிடுவேன்-தமிழ்ச் சாதி விழித்திடவே! -தமிழ் ஒளியின்:கவிதைகள். பக். 117 என்றும் கவிஞர் தம் இலட்சிய வேட்கையை? வெளியிடு கின்றார். மேலும், மண்ணில் முளைத்தவன் கான்-அதன் மார்பில் திளைத்தவன் கான் எண்ணித் துணிந்துவிட்டேன்-இனி எங்கும் பறந்து செல்வேன்! -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 119 என்ற கவிதை, உலக அறிஞர்க்கும் கலைஞர்க்கும் கூறப் படும்ஒப்பற்ற அனுபவ அறிவுரையாகத்திகழ்கிறது. நாளை எனும் நாளை வரவேற்கும் கவிஞர்கவிதையில் அவருடைய ஆழ்ந்த சித்தாந்தம் விளங்கக் காணலாம். கேற்று வாழ்ந்த வாழ்வெல்லாம் கினைவைக் கொல்லும் சோதனையாம் காற்றில் கதறும் துன்பஒலி கனலுங் கனலாம் இன்றைக்கு!
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/189
Appearance