பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶9@ இலக்கிய ஏந்தல்கள் கேற்றும் இன்றும் வெறுப்புற்றேன் நீயேன் இன்னும் ஒளிகின்றாய்? மாற்று மருந்து தரவல்லாய்! மலரும் நாளே வாராய்நீ! சுற்றம் என்போர் கைதிகளாம்! சொத்தும் சுகமும் கற்பனையாம்! வற்றும் குளத்து மீனாக வாழ்நாள் எய்துக் துயர்போகக் கற்றோர் நெஞ்சக் களிப்பேபோல் கம்பன் செய்த கவியேபோல் கற்றேன் ஒழுக மலர்விரியும் நாளே வாராய், வாராய்நீ! - தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 120 பெரியார் போற்றல் கவிஞர் நாட்டுத் தலைவர்களையும், கவிஞர் பெருமக்களையும் தக்காங்கு போற்றக் காணலாம் புலமையைப் புலமை மதித்தல் சிறப்பன்றோ! நேரு இல்லாத இந்தியா, நீரிலா நிலத்தைப் போலாம்!" (பக். 139) என்றும், பாரதியின் புகழ் பாடுகையில், கண்வழி சொட்டுங் குருதி யொடுங் காணில் விழிதடவி-தமிழ்ப் பண்வழி சென்று பழம்புகழ் சேர்த்தவன் பாரதி என்பவனாம்! கொத்தும் வறுமைக் கழுகு பறந்திடக் கூகை அலறிவிழப்-பணப் பித்தர் திரியக் கிடந்த இருளைப் பிளந்து பிளந்தெறிந்தான்! - தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 141 என்றும் குறுப்பிட்டுள்ளார். பாரதிதாசன் புகழினை,