பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் முடியரசனின் ஊன்றுகோல் ஒர் ஆய்வு நூலின் நாயகர் பற்றிய வரலாறு 16.10.1881இல் இராமநாதபுரம் மாவட்டம் மகிபாலன்பட்டியில் திருவாளர் முத்துக் கருப்பன் செட்டி யார்-திருமதி சிவப்பி ஆச்சி இவர்களுக்கு நன்மகவாய்த் தோன்றியவர் பண்டிதமணி என்று தமிழுலகம் பாங்குடன் அழைக்கும் திரு மு. கதிரேசன் செட்டியா அவர்களாவர். இவர் அரசஞ் சண்முகனாரிடம் தமிழ் கற்றார். தருவை நாராயண சாத்திரியாரிடம் வடமொழி கற்றார். காரைக்குடி சொக்கலிங்க ஐயாவிடம் சமய அறிவு பெற்றார். 1912ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்தம் மனைவியார் பெயர் மீனாட்சியாகும். ஐந்து ஆண்களும் மூன்று பெண்களும் இவர்தம் மக்கள்ாவர். பண்டிதமணியின் சீரிய தமிழ்ப்பணியாக அவர் சன்மார்க்க சபையினை 1909 ஆம் ஆண்டில் தோற்றுவித்ததைச் சொல்லலாம். 1933ஆம் ஆண்டு ஈழ நாடு சென்று சோம் பொழிவுகள் ஆற்றிவிட்டுத் திரும்பிய இவர், அண்ணா மலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் பணியினை 1934இல் ஏற்றுக்கொண்டு அப் பணியினை 1946ஆம் ஆண்டுவரை திறம்படச் செய்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கண்ட அருந்தமிழ் வள்ளல், இசைத் தமிழிற்கு ஏற்றம் தந்த வள்ளல் அண்ணாமலை அரசரின் தலைமையில் 1941ஆம் ஆண்டு இவருக்கு மணிவிழாக் கொண்டாடப்பெற்றது. 1925ஆம் ஆண்டில் பண்டிதமணி என்ற பட்டத்தினைச் சன்மார்க்க