பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 இலக்கிய ஏந்தல்கள் பாமலர்கள் கொண்டு நாளும் அவளை அருச்சிக்கும் நாயன்மார்; தமிழ்ப்பிழை செய்வாரை மனமுருக வைத்துத் தினமலரைத் திருத்தும் மணிவாசகர். கண்ணொளி மங்கினும் தமிழ்நலத்தைக் கூர்ந்து கண்டு, காட்டத் தளராதவர். தலைமுடி நரைப் பினும், தமிழைப் பாடும்போது இளமை பெற்று. மீசையை முறுக்கும் தமிழ் மறவர். தமிழ்த்தாயைப் காடும் பணியில் ஒய்வு காணாதவர்! மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள எழில்மிக்க. சிற்றுாராகிய பெரிய குளத்தில் 7-10-1920இல் கவிஞர் முடியரசனார் பிறந்தார், சுப்பராயலு-சீதாலட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இவர், தாய்மாமன் துரைசாமி அவர்கள் பிற்கால இலக்கியங்கள்பால் காட்டிய பெரிய ஈடுபாட்டினால் இவருக்கும் இளமைக் காலத்தி லேயே இலக்கிய ஆர்வம் மிகுந்து இலக்கிய இன்பத்தில் ஈடுபட்டுத் திளைக்கத் தொடங்கினார். இவர்தம் ஊரே இவருக்குக் கவிதை பாடும் ஊற்றினைத் தோற்றுவாய் செய்தது என்பதனைப் பrம் அறியும் பாம்பின கால்' என்பது போல, இவரோடு நெருங்கிப் பழகியவரும், இவரைப் போலவே கவிதை ஆற்றிலில் வல்லவருமான அணிச்சவடி புகழ் கவிஞர் பாவலர் மணி ஆ. பழநி அவர்கள் பின்வருமாறு உரைப்பர்: விளைந்து கிடக்கும் மேற்கு மலைத்தொடரும் அதில் மேய்ந்து திரியும் மேகக் காட்சியும், இசை பாடும் புள்ளினமும், இறங்கி வரும் சிற்றாறும், வெள்ளிக்காசைச் சுண்டி விட்டாற்போலத் துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்களும் வெடித்துச் சிரித்துக் காண்பவர் விழியைக் கவரும் வாசமலர்க் குளமும்