பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ tarr. 209 துரைராசுவின் இதயத்தைக் கவர்ந்தன; என்னவோ செய்தன; தாய் மாமன் துரைசாமி ஊட்டிய இலக்கியச் சாறு தன் வேலையைத் தொடங்கி விட்டது. இதனால் தமிழார்வம் கவிஞர் முடியரசனாரைப் பிட பிடித்து உந்த மேலைச் சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றார். அக்காலத்தே இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக அமைந்த பலரிடமிருந்து இவர் ஆழ்ந்த மொழிப் பற்றையும் இனப்பற்றையும் பெற்றார். மேலும் மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையின் ஆண்டு விழாவிற்காக விருகை புரிந்த இசைத்தமிழ் ஏந்தல் ஈழம் தந்த விபுலானந்தர், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, கன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், மகாவித்துவான் ரா. ராகவையங்கார் முதலான பெரு மக்களுக்கெல்லாம் தொண்டு செய்து மகிழும் பேற்றி னையும் பெற்றார். 1940ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தில் பங்கு கொண்டார். 1947இல் வித்துவான் பட்டம் பெற்ற இவர் தொடக்கத்தில் இரண்டாண்டுகள் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சென்னையில் வாழ்ந்து வந்த தமிழறிஞர் பலரோடு தொடர்பு கொண்டார். போர்வாள், கதிரவன், குயில், முருகு, -91էՔ(5 முதலிய இதழ்களில் இவரின் சிறுகதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவந்தன. புதுக்கோட்டையிலிருந்து அக்காலையில் வெளிவந்த 'பொன்னி' இதழ் இவரைப் 'பாரதிதாசன் பரம்பரை' என்று அறிமுகப்படுத்தியது. பே ராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள் தலைமையில்