பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 இலக்கிய ஏந்தல்கள் சுவடியிலும் எழுதிப் படிப்பதுதான் அந்நாளைய கல்வி முறை. விடியுமுன் விழிகள் விழித்து எழுந்து மலர் விரல் கொண்டு மண்ணில் வடிவுற எழுதிக் காட்டியும் அலர் சிறுவாயால் ஒதியும் சின்னஞ்சிறார் கல்விகற்றனர். "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று நடை முறையில் கற்பித்த ஆசிரியரைத் தொழும் தெய்வமாக எண்ணி வாழ்ந்தனர் கல்வி பயிலும் சிறார்கள். திண்ணைப் பள்ளியில் நெடுங்கணக்கைக் கற்ற கதிரேசர் ஆத்திசூடி, உலகநீதி முதலான நீதி நூல்களையும் இளமையிலேயே கற்றார். இளமையிற் கல்வி சிலையில் எழுத்தன்றோ!' தமிழ் மொழி, வடமொழி ஆகிய இருமொழி கற்று வல்ல வரானார். ஏழே ஏழு மாதங்களில் கல்விச் சிறப்பைக் கண்டவ ராய்த் துலங்கினார் கதிரேசர். பள்ளியில் ஏழு திங்கள் பயில்கதி ரேசப் பிள்ளை தெள்ளிய மதிய ராகித் தேர்ந்தகற் புலவராகி அள்ளிய புகழாம் செல்வம் அளப்பில பெற்றான் என்றால் உள்ளளவும் படுமோ அந்த ஓய்விலா உழைப்பை அம்மா (7) இருமொழி வல்ல ரானார் இனியசொல் வல்ல ரானார் உரைசெய உரிய ரானார் உயர்கவி தருவ ரானார்