in turf, 837 அரும்பிய புலமை யாற்றல் அழகிய மொட்டும் ஆகி, விரும்பிய போதும் ஆகி, விளைந்திடும் நறவம் மாந்தச் சுரும்பினம் மொய்க்கும் வண்ணம் தூயான் மலரும் ஆகி விரிந்தது; மணமும் சற்றே வீசிடத் தொடங்கிற் றங்கே (2:24) கவர்மணம் நுகர்ந்த மாந்தர் களித்தனர் புகழ்ந்து நின்றார் அவனெனும் சொல்லை மாற்றி அவரென அழைக்க லுற்றார் கவையுறு கால்கள் எங்கும் நடந்திட இயல வில்லை குவிதரும் புகழோ யாண்டும் குலவிட நடந்த தங்கே (2:25) ஈகைக் குறித்துக் கவிஞர் குறிப்பிடும் பாட்டிலும் நயம் நன்கியைந்து விருகின்றது. சொலக்கேட்டு விழியிமைகள் இமைப்பதில்லை தூண்டுவதால் ஈகைமனம் பிறப்ப தில்லை மலைக்காட்டில் திரிமயில்கள் தோகைதனை வற்புறுத்திக் கூறுவதால் விரிப்ப தில்லை மலைக்கோட்டு மாமுகிலும் பிறர் சொல்லை மதித்தெழுந்து மழைநீரைப் பொழிவதில்லை தலைக்கொள்ளும் இயல்புணர்வால் மனங்குளிர்ந்து தானுவந்து வழங்குவதே ஈகை யாகும் (3:6) பண்டிதமணியின் ஒழுகலாறுகளைப் புலப்படுத்தும் பாடல்களில் கவியரசு முடியரசனாரின் நுண்மாண் நுழை
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/237
Appearance