பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ք, եյր, 265. | ஐயரி அவர்கள் பிறந்த ஊராகும். வற்றாது வளங் கோழித்து விளையும் வயலுக்குத் தண்ணிரால் உயிரூட்டும் அயிரியாறு, வரகனேரியையும் வளப்படுத்துகிறது. மய அதப் பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்ற நெல் வயல்களையும், வாழைத் தோட்டங்களையும் தென்னந் புதாப்புகளையும் கொண்ட திருவிடமாம் வரகனேரியில் ஆங்கிலங் கற்றுக் கல்வித்துறையில் பாங்குற பணியாற்றிய 'வங்கடேசையருக்கும் அவரின் அருமைத் துணைவியார் காமாட்சியம்மைக்கும் 2-4-1981 இல் ஐயரவர்கள் பிறந் தrர்கள். ஈரோட்டிற்கண்மையிலுள்ள சின்னாளம் பட்டியிற் பிறந்த தாய் காமாட்சியம்மையின் மணிவயிறு வாய்த்த வ.வே.சு. ஐயரவர்களின் பிள்ளைத் திருப்பெயர் வேங்கட சுப்பிரமணியர் என்பதாகும். வீட்டில் தொடக்கத்தில் தந்தையாரே கல்வி பயிற்று. வித்தார். பின்னர் ஐரோப்பியர் நடத்திய மிஷினரி பள்ளியில் ஆங்கிலக் கல்வி பயின்றார். இலத்தீனை இவர் இரண்டாவது மொழியாக எடுத்துப் படித்தார். கல்வியில் கருத்துான்றியதோடு மட்டும் அமையாமல் காலையும் மாலையும் கடுமையான உடற்பயிற்சி முறைகளிலும் சிந்தையைச் செலுத்திக் கல்வியால் உள்ளத்தையும் உடற் பயிற்சியால் உடலினையும் கண்ணென ஓம்பிக் காத்து வந்தார். கிரேக்க உரோமானிய வீரர் கதைகளை இளமை நாள்களிலேயே விருப்புடன் படித்தார். 1893ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேஷன் தேர்வில் சென்னை மாகாணத்தில் ஐந்தாவதாகத் தேறினார், 1894-1896இல் கல்லூரியில் எப்.ஏ. படித்து முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் ஷெல்வி, பைரன், ஷேக்ஸ்பியர் முதலியோரின் எழுத்தோவியங்களை விருப்பமுடன் கற்றார். எமர்சன் கட்டுரைகளையும், ஜான் ஸ்டூவர்ட் மில்லின் உரிமை மணம் கமழும் எழுத்துக்