பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

էH IIr, 267" ஒருவருடன் சேர்ந்து வழக்கறிஞர் தொழில் புரிந்தார். அங்கிருந்த கலையில் உருது மொழியினையும் ஒரளவு தெரிந்துகொண்டார். பாரிஸ்டர் படிப்புப் படிக்க வேண்டும் என்ற எண்ணங்கொண்ட ஐயரவர்கள் நம் மைத்துனர் உதவியால் ல ண் ட னி ல் ஒர் 'உண்டியல் கடை அமைத்துக் கொண்டு அங்குச் சென்று படிக்க விரும்பினார். தம் மனைவியையும் மகன் பட்டுைை யும் மைத்துனர் ஆதரவில் விட்டு விட்டு இலண்டன் சென்றார். இலிங்கன் என்னும் செல்வரால் சட்டம் பயிலும் மாணவர்க்கென :4ஆம் நூற்றாண்டிற் கட்டப் பட்ட விடுதியில் ஐயர் சேர்ந்து பாரிஸ்டர் படிப்புப் பயிலத் தொடங்கினார். அங்குத் தங்கிதான் சித்தரஞ்சன் தாசர், காந்தியடிகள் முதலானோரும் சட்டம் பயின்றனர் ஐயரவர்களின் அளவுக்கு மீறிய இலத்தீன் மொழியறிவு அவர் சட்டம் பயிலுவதற்குப் பெருமளவு துணை செய்தது ஐரோப்பியரின் கலை வாழ்வினை விரும்பிய ஐயர் அவர் களின் சமூக வாழ்வினை விரும்பவில்லை. ஐரோப்பிய இசையினையும் நடனத்தினையும் விரும்பிப் பயின்ற ஐயர் அந்நாளிலும் வள்ளுவரையும் கம்பரையும் மறக்கவில்லை. மேலும் ஐயரவர்களுக்கு ஐரோப்பிய உணவுபிடிக்கவில்லை. எனவே இந்திய மாணவர்கள் தங்கி உறைந்த இந்திய விடுதி சேர்ந்தார். அவ்விடுதியில்தான் மராட்டிய சிங்கம் விநாயகதாமோதர சவர்க்கார் என்னும் புரட்சியாளரி வாழ்ந்து வந்தார். அவரோடு ஐயர் நெருங்கிப் பழகினார். "நாட்டு விடுதலைக்காக நாங்கள் எல்லாம் உயர் நோக்கம் கொண்டு உழைத்து வரும்பொழுது நீங்கள் பயனற்று இசை நாட்டியம் பயின்று வாழ்வை வீணாக்கிக் கொள்ள லாமா?’ என்று ஐயரவர்களைப் பார்த்துச் சவர்க்கார் கேட்டார். ஐயர் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. புரட்சிப் பொறி பட்டு அவரும் தீவிரவாதி