பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Н, нrr, 369 அாவர்களின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இசை ந் து. இதுபோன்றே பின்னொரு நாளில் திருவல்விக் பாணியிலிருந்து வந்த திருமலாச்சாரியாரும் உளவாளி அாக இருப்பாரோ என எண்ணினார் ஐயர். அவரை அற்றறிந்தார். புடம்போட்டுப் பார்த்ததில் திருமலாச்சாரி தாய சொக்கத் தங்கம் என்று கண்டறிந்தார். திருமலை கயத் தாமே உளவாளியாக்கிப் போலீசுக்குத் தகவல் தருவதாகக் கூறவைத்து அதற்கெனப் பணமும் பெற டிவத்தார். இவ்வாறு திறமையுள்ள போலீசாரின் கண்களில் மண்ணைத் துரவி. ஐயரவர்கள் துப்பாக்கி களையும் ரவைகளையும் இலண்டனிலிருந்து பம்பாய்க்கு இந்திய உரிமைச் சங்கத்தின் சார்பில் ரகசியமாக அனுப்பி வைத்தார். மேலும் இராமச்சந்திர தத்தt, விபின சந்திர பாலர், லாலாஜி முதலியோரை இலண்டனில் சந்தித்துப் பேசினார். அனர்கள் ஐயரவர்களின் நாட்டுப் பற்றைப் பாராட்டினர். 1908-ல் கோபாலகிருஷ்ண கோகலேவைக் கண்டார். அவருடைய மிதவாதப் போக்கு இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தராது என ஐயரவர்கள் முடிவிற்கு வந்தார் 1908ல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து தென்னாப்பிரிக்க இந்தியர்கள் அந்நாட்டிற் படும் துயரினை இலண்டன் பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க வந்திருந்தார். அவரைப் போய்க் கண்டார் ஐயரவர்கள். எளிமைத் திருக்கோலமும் வன்முறை விரும்பாதஉள்ள மும் கொண்டிருந்த காந்தியடிகள் ஐயரவர்களுக்கு ஒரு விந்தைமிகு மனிதராகவே தோன்றினார். ஏனெ னில் ஐயரவர்கள் வலிமைமிக்க ஆங்கிலேயனை வன்முறை ஒன்றாலே மட்டும்தான் இந்தியாவை விட்டு வெளியேற்ற முடியும் என்று எண்ணியிருந்தார். ஆனால் காந்தி யடிகளோ "உலகில் என்றும் உண்மையே பெரியது: ஆற்றல் வாய்ந்தது; உண்மையே கடவுள்; கடவுளுக் கு.