W. பி.11. 271 சவர்க்கார், டாக்டர் ராஜன் ஆகியோரைத் தவிர மற்றெல்லோரும் பிரிந்து சென்றனர். அவ்வாறு பிரிந்து போன இளைஞர்களில் ஒருவன் மதன்லால் டிங்கார' என்பவன் ஒருவன். "வாய்ப்பேச்சு வேண்டா; செயல் வேண்டும்; அதற்கு எந்த இன்னலையும் ஏற்க வேண்டும்" என்பது புரட்சியாளர் கொள்கை. ஒருமுறை இதனைச் சோதித்துப் பார்க்க ஐயரவர்களே, டிங்கராவின் உள்ளங் கையை மேசையின்மேல் வைத்துக் கொண்டு ஊசியை ஏற்றிக் கையில் ரத்தம் பீறிட்ட நிலையிலும் டிங்கராவின் முகமும் அகமும் நிலையினைக் கண்டார். இந்தி டிங்கரா என்னும தேசபக்த இளைஞன் 1909-ல் இந்கிய அமைச்ரிருக்கு இந்திய அரசியல் செயலாளராக இருந்த சர். கன்ஸன் வைலி ஐ. சி. எஸ் என்ற ஆங்கிலேய அதிகாரியைச் சு ட் டு க் கொன்றான். இக்கொலை இலண்டன் ஜிகாங்கீர் ஹாலில் நடந்த விருந்தில் நிகழ்ந்தது. இக்கொலையினைத் தடுக்க முனைந்த லால்காகா என்ற பார்சி கெல்வரும் துப்பாக்கிக் குண்டு பாந்து மாண்டார். இலண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்தது. போலீசாரின் எந்தச் சித்திரவதையாலும் மனம்மாறி எவரையும் காட்டிக் கொடுக்காத மதன்லால் டிங்கரா கோாட்டில் "எனக்குக் கன்ஸன் வைலிமேல் தனிப்பட்ட பகைமையேதும் இல்லை. ஆங்கிலேயர் தம் அடக்குமுறையால் இந்தியரைக் கொடுமைப்படுத்து கின்றனர். அதற்குப் பழிவாங்கவே இவ்வாறு செய்தேன். என் நாட்டு விடுதலைக்கு இதுதான் உகந்தவழி என நான் எண்ணுகிறேன்” என்றான். தூக்குதண்டனை கிடைத்த போதும் "என் நாட்டிற்காக உயிர்விடும் ாேறு பெற்றேன்" என்று கூறி முகமலர்ச்சியுடன் துரக்குக் கயிற்றை ஏற்றுக் கொண்டான். இதற்கு வ. வே. சு. ஐயரவர்கள் அவனுக் தந்த பயிற்சியும் நெஞ்சுரமுமே காரணங்களாகும்.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/271
Appearance