உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

нн ниrr. B83: முதலிய இயற்கைப் பாடல்களைப் பாடிப் பாடிக் குழந்தைகளைத் தாலாட்டுவது வழக்கம், இயற்கை யைப் பற்றிய பல கதைகள் பாட்டிமார் சொல்வது முண்டு. திருடன்கதை, கொலைஞன் கதை, குடியன் கதை, பேய்க்கதை. அச்சமூட்டுங்கதை முதலிய ஆபாசக் கதைகளைக் குழந்தைகட்கு எவருஞ் சொல்லுதலே கூடாது மரஞ்செடி கொடிகள் அழகாக வளர்ந்து காய் கனிகள் தருவதையும், காற்று வீசுவதையும் ஞாயிறு ஒளி உமிழ்வதையும் காட்டி, இம்மரஞ்செடியும், காற்றும் ஞாயிறும் ஏதாவது பயன் கருதிக் கடன்களாற்றுகின்றனவா? என்று பெற்றோர் அடிக்கடி இளம் பெண்ணுடன் பேசிப் பேசிப் பரோபகார சிந்தையை அவள் உள்ளத் தில் பெருக்குவாராக. இதுபோன்றே மாணவச் செல்வங்கள் கல்வி பயிலத் தாய்மொழி வாயிலாகவே காடங்களைக் கற்பிக்க வேண்டும் என்ற கருத்தையும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆங்கிலமென்பது ஒருநாட்டு மொழி. அம் மொழிப் பயிற்சியிலேயே கல்வியறிவுண்டு என்று கருதுவது அறியாமை. கல்வியறிவை எம்மொழி வாயிலாகவும் பெறலாம், கல்வியறிவிற்கு இம்மொழி' அம்மொழி என்னுங் கட்டுப்பாடில்லை. ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாட்டிலுள்ளோர் தத்தம் தாய் மொழி விடுத்து, ஆங்கிலம் படித்தா கல்வி அறிவு பெறுகிறார்? புதுவைக்களுள்ள உள்ள தமிழ் மக்கள் ஆங்கிலம் கற்றா மேல்நாட்டுத் தத்துவங்களை உணர் கிறார்கள்? திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர்