பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-800 இலக்கிய ஏந்தல்கள் சின்னேரங்களில் டாக்டர் அவர்கள் உள்ளத்திற்கு மட்டு மன்றி உடலுக்கும் மருத்துவ ராக விளங்குவார்கள். டாக்டர் அவர்கள் எழுதியுள்ள நாவல்கள் பலவும் சமுதாயத்தைச் சீர்திருத்தளழுந்தவைகளாகும், அவற்றி ல் சம்பவங்களைவிட உரையாடல்களும், மனவியலும், தத்து வங்களும் மண்டிக்கிடக்கும். ஷாவின் எழுத்துக்களிலும் இதனையே காணலாம். அல்லி" "அகல் விளக்கு" எனும் இவர்கள் நாவல்கள் செல்லரித்துப்போன ஆண்கள் சமுதாயத்தினைச் சீர்திருத்த வல்லன; பெற்றமனம்’ தாய்மை யன்பைத் துலக்குவது; காலஞ் சென்ற கல்கி அவர்கள் நெஞ்சைத் தொட்டது மலர்விழி’ எனும் நாவல் வாழும் சிறந்த நாவலாசிரியராம் அகிலனின் கருத்தைக் கவர்ந்தது கயமை’ எனும் நாவலாகும். நெஞ்சில் ஒருமுள் மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது. அண்மையில் வெளி வந்துள்ள 'மண் குடிசை விழுமிய கருத்துக்களைத் தாங்கி நிற்கிறது. இவர்களுடைய நாவல்களைப் பற்றிய தோர் ஆராய்ச்சி அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ஒருவரால் ஆராய்ச்சிப் பட்டத்திற்கென்று செய்யப்பெற்று வருகின்றது. காந்தியடிகளின் வாழ்விலும் தொண்டிலும் டாக்டர் அவர்களுக்கு ஈடுபாடு உண்டு. காந்தியண்ணலின் வாழ்வு கொண்டே திருக்குறளின் அறத்துப்பாலை உணர்ந்ததாக டாக்டர் அவர்கள் கூறுவார்கள். திருவள்ளுவர் அல்லது. வாழ்க்கை விளக்கம் அதன் விளைவே. இவர்களுடைய 'திருக்குறள் தெளிவுரை தான் இதுவரையிலே தமிழில் வெளியான நூல்களில் அதிகப் பிரதிகள் விற்பனையான நூலாகும். இதுவரை இரண்டு லட்சத்திற்கு மேலே விற்பனையாகியிருக்கின்றது.