பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.rır. 307 தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட்டு அன்னாய் என்னுங் குழளி போல இன்ன செயினும் இனிதுதலை யணிப்பினும் நின்வரைப் பினள்என் தோழி' என்று குறுந்தொகைத் தொடர்களும் தலைமகளின் மிகச் சிறந்த குடும்பப் பண்பாட்டை விளக்கும். - நேர்ந்த மாறுதல் ஆனால் குடும்ப வாழ்க்கையில் காலந்தோறும் மாறுதல்கள் ஏற்பட்டு வரக்காணலாம். பெரும்பாலான குடும்பங்கள் இன்று பொருளியல் நிலை காரணமாக, பொருளாதாரக் கவலை காரணமாகச் சீர்கெட்டுச் சிறப்பிழந்து விரக் காணலாம். சமுதாய ஒழுங்கும் குலைந்துகொண்டு வருகின்றது. திருமணம் என்பது இரண்டு மனங்களின் அன்புப் பிணைப்பு என்பதுபோய், வணிக நோக்கில் திருமண ஒப்பந்தங்கள் நடைபெற்று முடிகின்றன. சங்க இலக்கியத்தில் தலைமகன் தலைமகளுக்கு முலைவிலை கிடைத்துப் பரிசமாகத் தலைமகளைக் கொள்ளுவது பேசப்படுகின்றதேயொழியத் தலைமகளுக் குத் தலைமகள் வீட்டார் பொருள் தந்து திருமணத்திற் பெறும் வணிக நோக்கு யாண்டும் சுட்டப்படவே இல்லை. "முழங்கு கடன் முழவின் முசிறி யன்ன கலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும் புரையர் அல்லோர் வரையலன் இலனெனத் தந்தையும் கொடாஅன்"