பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 இலக்கிய ஏந்தல்கள் குறுந்தொகை உணர்த்தும் குடும்ப வாழ்வு "சொல்லித் திருத்துதல் அரிது; பெரும்பாலும் அது பயன்தருதல் இல்லை. வாழ்ந்து காட்டுதல் பலரைப் பண்படுத்துகிறது" என்றும், "அன்பால் ஒன்றுபட்டுக் கணவனுடன் விாழ்ந்து இல்லறம் நடத்தும் மனைவி, அவனிடம் உள்ள சிறு குறை களை மறந்தும் மறைத்தும் வாழ்தல் இந்நாட்டுக் குடும்பப் பண்பாடுகளில் ஒன்றாகும். குற்றத்தை உடனே எடுத்துரைத்துக் கடிதல் அல்லது துாற்றுதல் உரிமையின் பயனாகக் கொள்ளப்படலாம். ஆனால் அதனைப் aொறுத்தலும் மறத்தலும் மறைத்தலுமே அன்பின் நெறியாகும்" என்றும், "தாயின் உணர்ந்து பண்பாடு மகளுக்கு எளிதில் அமைகின்றது. ஆண்டும் அனுபவமும் முதிர்ந்தவள் தாய். விளையாட்டை விட்டு இல்லறம் ஏற்ற இளம் பெண், மகள். அவளுடைய பண்பாடு இவளுக்கு எளிதில் அமைந்தது. அது சொல்லித் திருத்தும் முயற்சியால் அன்று; வாழ்ந்து காட்டிய வழியால் ஆகும். அதனால் தான் குடும்பப் பண்பாடு எளிதில் நீங்காமல் வழிவழியாக வருகின்றது", என்றும் டாக்டர் மு.வ. குறுந்தொகைச் செல்வம்’ என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்." மேலும் அவரோடு தனி குடும்ப வாழ்வில் மு.வ. அக்கரை உரையாடல் கள் நடத்துகின்ற காலையிலும் குடும்ப வாழ்க்கையின்மேல் அவர் கொண்டிருந்த அக்கரையும் பற்றும் தெள்ளத் தெளிவாக விளங்கின. உறவினர்களையும் நண்பர்களையும் கண்டு அளவளாவும் போதும் தவறாமல் அவரவர்கள் பெற்றோர் உற்றார் குழந்தைகள் நலன்களையெல்லாம் உசாவுவார். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடம், படிக்கும் வகுப்பு பள்ளிக்குப் போகும் ஏற்பாடு, மதிய உணவிற்கான ஏற்பாடு, படிப்பில்காட்டும் அக்கரை