பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 இலக்கிய ஏந்தல்கள் இடம்பெறச் செய்திருந்தாலுங்கூட, அன்பான வாழ்விக தாம் காட்டிய எல்லையற்ற ஈடுபாட்டினை ஆசிரிய அறவாழி என்னும் பாத்திரத்தின் வாயிலாகப் (பெரும் பாலும் மு.வ.வே. அறவாழி என்ற பாத்திரமாக வருகிறா எனலாம்) பின்வருமாறு குறிப்பிட்டிருக்கக் காணலாம். "எனக்கு ஆணும் பெண்ணுமாக குடும்பங்கள் அன்பாக வாழ வேண்டும் என்பதில் ஆசை உண்டு. ஏன் என்றால், கணவலும் மனைவியுமாக அன்பாக வாழும் வாழ்க்கை இல்லை என்றால், காட்டில் உள்ளதை வி நாட்டில் கொடுமையான விலங்குத் தன்மை இருக்கும். இந்நாகரிகம் எதுவும் ஏற்பட்டிருக்காது. காட்டை விட மிகுதியான உறுமல் நாட்டில் இருக்கும் அல்லது, உலகத் தில் பாதிப்பேர் பைத்தியக்காரராக இருப்பார்கள். ஆகையால் எப்போதும் நான் காதல் வாழ்க்கையை ஆதரித்து வருகிறேன்..தோட்டத்தில் ஒரு நல்ல முல்லைக கொடி செழித்து வளர்ந்து பூத்தால் எப்படி மகிழ்ச்சி அடைவேனோ, அப்படி எந்தக் குடும்பத்திலாவது அன்பாக வாழ்க்கை நடத்துவதைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவேன்." இது மட்டும் அல்லாமல் தம் படைப்புகளில் உவமை கள் வாயிலாகவும் தாம் குடும்ப வாழ்வில் காட்டிய ஆர்வத் தினையும் அக்கரையினையும் அனுபவத்தினையும் எடுத்து மொழியக் காணலாம். பின்வரும் அவர் தம் உவமைகள் இக்கரு த்திற்கு அரண் செய்யக் காணலாம். "மங்கை தாய் வீட்டை விட்டுப் புறப்படுவது போல் கண் கலங்கினாள்' "கன்னாப்பூருக்கு இதற்கு முன் சில முறை போயிருக் கிறேன். அப்போதெல்லாம் முதல் முறை பள்ளிக்கூடத்தில்