பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●威务 இலக்கிய ஏந்தல்கள் எவ்வழி அறிதும் என்ற அந்த மணிமொழியை நினைந்து கொண்டே நடந்தேன்." பொருந்தா வாழ்க்கை இவ்வாறு நல்ல குடும்ப வாழ்க்கையினை நெஞ்சா நினைக்கும் டாக்டர் மு. வ. அவர்கள் நிகழ்கால உலகிற்கு வருகிறார். இக்கால உலகில் திருமணங்கள் வியாபா நோக்கில் நடைபெற்று அதன் காரணமாகப் பொருந்தா வாழ்க்கை புகுந்துவிடுவதனைக் காண்கிறார். வியாபா முறையில் அமையும் குடும்பத்தினையும், ஆரவாரமற்ற அமைதிக் குடும்பத்தினையும் பின்வருமாறு ஒப்பிட்டு உரைக்கின்றார் :

  • மின் விளக்குகள் வந்த பிறகு குத்து விளக்குகள் என்ன ஆகும்? கலைவிழாக்களில் அழகுக்காகக் கொண்டு வந்து வைக்கப்படும். வியாபார முறையான குடும்பங்கள் வந்தபோது அன்புநெறிக் குடும்பங்கள் தொகையில் குறையும்; மதிப்பில் பெருகும். து இயற்கை."

"மண்குடிசை”யில் வரும் மெய்யப்பன் தன் மனைவி யைப் பற்றிப் பின்வருமாறு உரைக்கக் காணலாம்: "நான் உடை கழற்றும்போதோ, கைகால் அலம்பும் போதோ என்னிடத்தில் ஆவலுடன் வந்து உதவி செய்னாள் என்று எதிர்பார்ப்பேன். முகம் அலம்பிக் கொண்டு என் அறையில் நுழைந்து, நாற்காலியில் உட்கார்ந்து களைப்பாறும்போதாவது வருவாள் என்று எதிர்பார்ப்பேன். அப்போதும் பேச்சுத்துணை கிடைத் தால் அவர்களோடு பேகிக்கொண்டிருப்பாள். பேச்சுத் துணைக்கு யாரும் இல்லாதபோதும் சமையலறைக்கோ தோட்டத்துக்கோ ஏதாவது வேலையாகப் போய்விடுவாள். நானாக அழைத்தால் வருவாள். அவளாகவே ஒவ்வொரு