பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 இலக்கிய ஏந்தல்கள் குறைசொல்லிப் பயன் என்ன? குருடனும் செவிடனும் கூத்துப் பார்த்த கதையாக முடியும்." "ஒரே வீட்டில் இருவரும் இருந்தோம். ஆனால் எங்களுக்கு இடையே எத்தனையோ கடல்களும் மலை களும் ஆறுகளும் காடுகளும் இருந்தன. அவற்றைக் கடக்க என்னாலும் முடியவில்லை; அவளாலும் முடிய வில்லை; அவள் கடக்கவே விரும்பவில்லை; நான் விரும்பினேன்; முடியவில்லை." " நாளடைவில் என் அன்பைவிட சுற்றத்தாரின் அன்பையே அவள் தேடி அலைந்தாள். என் மதிப்பைவிட வெளியாரின் மதிப்பையே நாடி விரும்பினாள் என் மானத்தைவிடத் தன் புகழையே பெரிதாகக் கொண்டு வாழத் தலைப்பட்டாள். கிடைத்த ஒன்றைப் புறக்கணித்து விட்டுக் கிடைக்காததை நாடி ஏங்கும் குரங்கு மனம் அவளைக் கெடுத்தது. எனக்காகச் செய்யவேண்டிய கடமைகளையும் புறக்கணித்துவிட்டு, ஊரில் உள்ள பெண்களோடு கூடிக் குலாவுவதிலும் அழைத்த வீடுகளுக் கெல்லாம் ஆர்வத்தோடு போய்வருவதிலும் காலத்தைப் போக்கினாள். இ வ. ள் தா னா வாழ்க்கைத்துணைவி என்னும் வெறுப்பு என் நெஞ்சத்தில் வேரூன்றிவிட்டது. வேறு வழியில்லாமல் இருவரும் ஒரே வீட்டில் தங்கி யிருந்தோம் என்று சொல்லலாம்.' ஏழைக் குடும்பமும் பணக்காரக் குடும்பமும் வருவாய் குறைவாக இருந்தாலும் மனம் நிறைவுடன் பண்பாடு வளர்ந்தால் ஏழை வீடு அமைதி பொலியும் ஆலயமாக விளங்க முடியும் என்றும், பணக்காரக் குடும்பத்தில் செல்வம் நிறைந்திருந்தாலும் கணவன் மனைவியரின் மனம் பொருந்தாமற் போய்விடுமானால்