so.com. 329 நடக்கிறேன். அவர் சொன்னபடி நடக்கும்போது என் மனத்தில் ஒரு தெம்பு ஏற்படுகிறது. அவர் விருப்பம்தான் எனக்கும் விருப்பமாக இருக்கிறது" என்றாள்." ஒத்த உள்ள வாழ்க்கை "அன்பு நிரம்பிய இல்வாழ்க்கையில் கணவன் மனைவி யிடத்தில் செலுத்தும் அன்புக்கும், மனைவி கணவனிடத் தில் செலுத்தும் அன்புக்கும், ஈடு இல்லை. மனைவி கணவனுடைய இன்ப துன்பங்களையே தன் இன்ப துன்பங்களாக உணர்கிறாள். கணவனுக்காகவே வாழ்கிறாள். அவனுடைய கண்ணிரால் கலங்குகிறாள்"," என்ற வரிகளில் நல்லகுடும்ப வாழ்வுப் பண்பினைக் காணலாம். - அன்பு வாழ்க்கை - 'அந்த நாளில் வரும் பொன்முடி-ஆறுமுகம் வாழ்வு அன்பு வாழ்க்கைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். பணமும் பகட்டும் பாழ்படுத்தாத-ஆனால் அதே நேரத்தில் அன்பும் பண்பும் அமைந்த அந்தக் குடும்ப வாழ்க்கையைப் பற்றி ஆறுமுகம் கூறுவதைக் கேட்போம் : பொன்முடி; எப்படியோ வாழ்ந்தோம்! உலகத்தை வாசற்படிக்கு வெளியே விட்டுவிட்டு வாழ்ந்தோம். உலகப்பற்றை விட்ட இடம்தானே வீடு? நாம் வாழ்ந்த வாழ்வு வீட்டு வாழ்வுதான்! பிறருடைய புகழையும் மதிப்பையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்தோம், உலகத்தை உள்ளே விட்டிருந்தால் வாழ்க்கை ஒரு பெருஞ்சுமையாகி விட்டிருக்கும். நமக்கோ வாழ்க்கை ஒரு நல்ல விளையாட்டாகவே முடிந்தது. இன்பம் துன்பம் இரண்டிலும் விளையாடினோம். வாடகை வீட்டில்,
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/329
Appearance