பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய ஏந்தல்கள் 14 اته எதிர்கார்க்கிறாய். அதுதான் தவறு. நூறாயிரத்தில் ஒருவர், கோடியில் ஒருவர் அப்படி இருக்க முடியும். நாம் அதை எதிர்பார்ப்பது அறியாமை. மனிதப் பிறவியின் குணம் குற்றம் இரண்டும் உடைய ஒருத்தியைத் தான் நீ எதிர்பார்க்கவேண்டும். ஆகவே, குற்றங்களைப் பொறுத்து வாழ்க்கை நடத்து' குறள் மணிமொழி குணம் நாடிக் குற்றம்காடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்பது குறள் மணிமொழி. இந்தத் தலையாய பண்பினைப் பின்வரும் வரிகளில் மு.வ. வலியுறுத்து கின்றார். 'இது அரசியலுக்கு மட்டும் அல்ல: குடும்ப இயலுக்கும் கொள்ளத் தக்கது. உங்கள் எதிர்கால மனைவியரிடம் குற்றம் காணும்போது குணத்தையும் காணுங்கள். மிகை நாடி மிக்க கொள்ளுங்கள்' குறள் மணிமொழியையே தம் உரையில் வைத்துத் "திருவேங்கடம்’ என்னும் மாப்தர் வாயிலாக மு.வ. பின்வருமாறு பேசுகின்றார். "உங்கள் எதிர்கால மனைவியரிடம் குற்றம் காணும்போது குணத்தையும் காணுங்கள். மிகை நாடி மிக்க கொள்ளுங்கள் என்று ஆசிரியர் சொன்னது தக்க சமயத்தில் வந்து காத்தது. வழியறிந்த சிக்கனம், துன்பம் வந்தபோது உருகிக் கண்ணிர்விட்டு ஆதரவு தருதல், உறுதியான கற்பு, உலகியல் நடைமுறை, நல்ல வழக்கங்களை விடாமை, கட்டான உடலழகு.