பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*1. гит. 351 இப்புதினத்திலும் தானப்பன் மனைவி தானப்க அறுக்குத் துரோகம் செய்துவிட்டு, வேறு ஒருவனோடு ஒடிப் போய் இறுதியில் திரும்பிவந்து கணவனுக்கு விஷம் தந்த கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டு மாண்டு போவதைக் காட்டுகின்றார். எனவே டாக்டர் மு.வ. அவர்களுக்குப் பெண்களுக்கு அளவுக்கு மீறி உரிமை தரக்கூடாது என்பதும், அவ்வாறு தந்தால் அதனால் அவர்களும் கெட்டுப்போய், உரிமை தந்தவர்களையும் மாய்த்துவிடுகிறார்கள் என்பதும் உண்மை என்று கருதுகின்றார் என்பதனை மேலும் சில விளக்கங்களால் அறியலாம். "ாைடாமலரி'ல் இடம் பெற்றுள்ள பின்வரும் கருத்து சித் திக்கத்தக்கது. 'திருமணம் என்பது சட்டத்தின் பாதுகாப்பாக இருக்கிறது. அதை ஒரு காவலாக வைத்துகொண்டும் திருமணமான பெண்ணிடத்தில் மற்ற ஆண்கள் தவறு செய்ய முயல்கிறார்கள். திருமணமான சில பெண் களும் அதை அரணாக வைத்துக் கொண்டு, கணவனைப் புறக்கணித்து மற்றவர்களோடு விளையாட விரும்புகிறார்கள். அந்தச் சட்டத்தின் அரண் இல்லையானால், தவறான விளையாட்டில் ஈடுபடுவதற்கு, அஞ்சுகிறார்கள்." பெண்கள் எளிதில் உணர்ச்சி வயப்பட்டு வாழ்வில் தங்களை இழந்துவிடுகிறார்கள் என்றும், அவர்கள் கூடுமான வரையில் ஆண்களோடு பழகாமல் இருப்பதே நல்லது என்றும், அப்படிப் பழக நேர்ந்தால் அது தவற்றில்