பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352. இலக்கிய ஏந்தல்கள் கொண்டுவந்து நிறுத்தி வாழ்க்கையினை அடியோடு அலங்கோலப்படுத்திவிடும் என்றும் மு.வ. அவர்கள் நுட்ப மாகத் தம் புதினங்களில் கூறியிருக்கக் காணலாம். "அந்த நாளில் இடம் பெற்றுள்ள அடிப்படையான இந்தக் கருத்து வருமாறு, ஆண்கள் வெண்ணெய் போல. பெண்கள் நெருப்புப்போல. நெருப்பை அணுகிய பின் வெண்ணெய் உருகாதிருக்க முடியுமா? ஆகையால் பெண்கள் கணவன்மாரைத் தவிர எந்த ஆண் களோடும் நெருங்கிப் பழகக்கூடாது." இக்கருத்தினையே இன்னும் சிறப்பாக, ஆழமாக அல்லி என்ற புதினத்தில் பின்வருமாறு வற்புறுத் தி உள்ளார். . "எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், உடம்பின் உணர்ச்சி உள்ள வரையில் கணவன் மனைவி அல்லாத ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகாமல் இருப்பதே நல்லது." இவ்வாறு ஆசிரியர் அறவாழி பாத்திரத்தில் மு.வ. வே. நின்று பேசுவதை உன்னுக. மேலும் அவர் வாடாமலரில், "முழுதும் மனைவிக்குக் கட்டுப்பட்டு நடப்பதால், குடும்ப வாழ்க்கை பற்றிய பொறுப்புக் குறையலாம், ஆனால் குடும்பத்தில் மக்கள் முன்னேறுவதற்கு. இடையூறு ஆகுமே என்று வருந்தினேன்.” என்று"குறிப்பிட்டிருப்பதும், பாவை’ப் புதினத்தில் பாவை. யின் சித்தியின் கணவரைப் பற்றிப் பின்வருமாறு ஆசிரியர் கூறியிருப்பதும் முதற்கண் ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற கருத்தையே வலியுறுத்தியிருக்கக் காணலாம்.