பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 இலக்கிய ஏந்தல்கள் சேற்றை விரும்பினால் நானும் சேற்றையே விரும்பு வேன். அதில்தான் இன்பமும் அமைதியும் உண்டு என்பதை இப்போதுதான் உணர்ந்தேன். அன்னத் திற்கு அன்னமே துணை. காக்கைக்குக் காக்கையே துணை, அவர் அன்னம் ஆகாவிட்டால் நான் காக்கை ஆகிவிடுவேன்." உண்மை என்ன ஆனால் ஆசிரியர் மு.வ.வின் கருத்துதான் யாது! அது பின்வரும் பகுதிகளால் விளங்கும். ஆமாம். ஆமாம். கண்ணகி கண்ணகி தான். முழுதும் கணவனுடைய பொம்மைபோல் நடந்தால் அதுபோல் ஆகிவிடுமே. பெண்களின் துன்பம் ஆண் களுக்குத் தெரியாமலே போய்விடுமே. கொஞ்சம் போராட வேண்டும். பிறகுவிட்டுக்கொடுக்க வேண்டும் அப்படி நடந்தால்தான் ஆண்களைத் திருத்த முடியும். அளவுக்குமேல் போராடவும் கூடாது. அளவுக்கும்ேல் விட்டுக்கொடுக்கவும் கூடாது. எதிலும் அளவு வேண்டும். அளவு தெரிந்து கொண்டு நடந்: தால் வாழ்க்கை துன்பம் இல்லாமல் போய்விடும்.” அமாவாசை இருளில் பூஞ்சோலையின் அழகு. தெரியுமா? அப்போது கண் இருந்தும் பயன் என்ன? ஆனால் முகரும் புலன்கொண்டும் அப்போதும் அந்தப் பூச்சோலையைப் போற்ற முடியும். வாழ்க்கை யிலும் அப்படித் தான். பிணக்கு வந்தபோதெல்லாம். அறிவு இருந்தும் பயன் இல்லை. ஆனால் அன்பு இருந்தால் போதும் நன்மை உண்டு."