பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357 கலைகின்றது. இந்த அவல நிலையினை மெய்யப்பன்' என்னும் பாத்திரம் பின்வருமாறு எண்ணிப் பார்க்கின்றது "இன்னாரோடு வாழ்நாள் முழுதும் வாழ்ந்திட வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதனால், பல குடும்பங்களில் கணவன் மனைவியின் மனம் கெட்டுப் போகிறது என்றும், வாழ்வு கசந்து போகிறது என்றும் ஒரு புரட்சிக் கருத்தை ஒரு முறை படித் திருக்கிறேன். அப்போது அதை நம்பவில்லை. மனைவியின் மனம் அந்தக் கட்டாயத்தால்தான் கெட்டு விட்டதோ? நாயைக் கட்டுப்படுத்தவில்லை; ஆறு ஆண்டுகள் கழித்தபிறகும் என் நன்றியை மறவாமல் அன்பு செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அதற்கு உரிமை உண்டு; என்னைப் பார்த்துக் குரைக்கலாம். அல்லது என்னிடம் வந்துட வால் குழைக்கலாம். அதனால் அதன் மனம் கெ வில்லை'." * மேலும் அதே பாத்திரம் தனக்கும் மனைவிக்குமான உறவினைப் பின்வருமாறு விமர்சிக்கின்றது. ஒரே வீட்டில் இருவரும் இருந்தோம். ஆனால் எங்களுக்கு இடையே எத்தனையோ கடல்களும் மலைகளும் ஆறுகளும் காடுகளும் இருந்தன. அவற்றைக் கடக்க என்னாலும் முடியவில்லை. அவளாலும் முடியவில்லை அவள் கடக்கவே விரும்: வில்லை நான்விரும்பினேன். முடியவில்லை." இரு துருவங்கள் - - கருத்து வேறுபாடும் கட்டப்பெறுகிறது, கரித் துண்டில் வரும் ஒவியர் மோகன் தன் மனைவி குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். - இ.ஏ.-23